
நீர்கொழும்பு, தளுபத பகுதியில் மத்ரஸா கட்டிடம் ஒன்றை எழுப்புவதற்கு பிரதேச சிங்கள மக்கள் குழுவொன்று எதிர்ப்பு வெளியிட்டதன் பின்னணியில் அங்கு பொலிசார் தலையிட்டு நிர்மாணப் பணிகளை நிறுத்திய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த காணி 20 வருடங்களுக்கு முன் மத்ரஸா நிர்மாணத்துக்காக அன்பளிப்பு செய்யப்பட்டு வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை அப்போதே இதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதன் பின்னணியிலேயே இத்திட்டம் கைவிடப்பட்டதாக அறியமுடிகிறது.
எனினும் தற்போது சுமார் 400 குடும்பங்கள் அப்பகுதியில் வாழ்கின்ற நிலையில் மீண்டும் கட்டிட நிர்மாண முயற்சி இடம்பெற்றுள்ளதுடன் தற்போது நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் இதில் தலையிட்டு தீர்வு காண முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-நீர்கொழும்பு முஸாதிக் முஜீப்
No comments:
Post a Comment