நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் ஆதரவளித்திருந்த நிலையில் மேலும் ஒரு பகுதியினர் வாக்களிப்பில் கலந்து கொள்வதைத் தவிர்த்திருந்தனர்.
இது தொடர்பில் இது தரப்பும் கட்சி உயர் பீடத்தின் முடிவுக்கமையவே தாம் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ள நிலையில் கட்சியின் 'பெரும்பான்மையினரின்' நிலைப்பாடு எதுவோ அதைப் பின்பற்றும் படியே ஜனாதிபதி உத்தரவிட்டிருந்ததாக விளக்கமளித்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர.
இதேவேளை ஆதரவாக 16 பேர் வாக்ளித்திருந்த போதிலும் 26 பேர் தவிர்ந்து கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர் அப்படித்தான் சேர்ந்திருந்தாலும் 102 மொத்த வாக்குகளையே பெற்றிருக்க முடியும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏலவே 122 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்ததாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் கட்சியில் இதை அடிப்படையாகக் கொண்டு பிளவுகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment