10,000 ரூபா மிரட்டிப் பறித்த கான்ஸ்டபிள் கைது! - sonakar.com

Post Top Ad

Monday 9 April 2018

10,000 ரூபா மிரட்டிப் பறித்த கான்ஸ்டபிள் கைது!


தான் கேட்ட லஞ்சப் பணம் 10,000 ரூபா தரப்படும் வரை தேசிய அடையாள அட்டையையும் கைத் தொலைபேசியையும் வைததிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.20,000 ரூபாவிலிருந்து பேரம் பேசி 10,000 ரூபா வரை விலைக்குறைப்பும் செய்துள்ள குறித்த கான்ஸ்டபிள் பொலன்நறுவயிலிருந்து கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்த ஒரு நபரையே இவ்வாறு மிரட்டிப் பணம் பறித்துள்ளார்.

குறித்த நபர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடவே கொழும்பு வந்ததாக மிரட்டப்பட்டு பணம் தரப்படும் வரை பொருட்களையும் கையகப்படுத்தி வைத்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment