வலுக்கும் மோதல்; திலங்க பதவி விலக முஸ்தீபு! - sonakar.com

Post Top Ad

Saturday 7 April 2018

வலுக்கும் மோதல்; திலங்க பதவி விலக முஸ்தீபு!


பிரதிசபாநாயகர் பதவியில் தன்னால் தொடரமுடியாது என திலங்க சுமதிபால சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நிலைப்பாட்டை அவ்வப்போது வெளியிட்டு வந்த திலங்க சுமதிபால, நம்பிக்கையில்லா பிரேரணையின் போது சபாநாயகர் ஆசனத்தில் அமரக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியினர் வலுவாக எதிர்த்து வந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக கருத்து வெளியிட முனைந்த போது அவர் பிரதி சபாநாயகர் என்ற வகையில் பக்க சார்பாக பேச முடியாது எனவும் எதிர்ப்பு வலுத்திருந்தது. இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாகவே தன்னால் அப்பதவியில் தொடரமுடியாது என திலங்க தெரிவித்து வருவதாகவும் தற்போது இராஜினாமா செய்வதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment