தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படும் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய நிர்வாக இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய தலைவராக ரஞ்சித் பெர்னான்டோ பதவியேற்றுள்ள அதேவேளை சுசந்த கட்டுகம்பொல, மனோ திட்டவெல்ல, ரொசான் பெரோ, எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோர் நிர்வாக இயக்குனர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.
வெளிநாட்டு நிறுவனங்களுடனான கூட்டு வர்த்தகத்துக்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment