வெசக் காலத்தில் சில வித்தியாசமான தன்சல்களும் இடம்பெறும். சம்பிரதாயபூர்வ தன்சல்களுக்கு பதிலாக மாற்று உணவுகள் மற்றும் செயற்பாடுகள் நடைபெறுவது வழக்கம்.
எனினும், அதனையும் மீறி மாவனல்லையில் 'பண' தன்சல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பின இந்துனில் சாந்த குணசேனவே இவ்வாறு ஆளுக்கு 100 ரூபாய் கொடுக்கும் பண தன்சலை நடாத்தியுள்ளது.
தமது பெற்றோரின் ஞாபகார்த்தமாக இவ்வாறு பண தன்சல் வழங்கியதாக அவர் தெரிவிக்கின்றமையும் வரிசையில் நின்று மக்கள் அதைப் பெற்றுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment