மஹியங்கனை பகுதியில் இயங்கி வந்த துப்பாக்கி பொருத்தும் தொழிற்சாலையொன்றை முற்றுகையிட்டுள்ள பொலிசார் அங்கு ஒருவரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் பரவலாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கொலைகள் இடம்பெற்று வரும் நிலையில் உதிரிப்பாகங்கள், இயந்திரங்களும் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
நாட்டுத் துப்பாக்கி தயாரிப்பு மற்றும் பழுது பார்த்தல் நடவடிக்கைகள் இவ்வாறு பல்வேறு சிறு ஆலைகளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment