புத்தாண்டு சந்தை நிலவரங்களை கண்காணிக்க திட்டம் - sonakar.com

Post Top Ad

Thursday 12 April 2018

புத்தாண்டு சந்தை நிலவரங்களை கண்காணிக்க திட்டம்புத்தாண்டில் பாவனையாளர்கள் நலன்கருதி, நுகர்வோர் பாவனையாளர்கள் அதிகார சபை விசேட கண்காணிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக பாவனையாளர் அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்பின் பேரில், ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் இத்திட்டத்தை, புத்தாண்டு காலத்தில் மேலும் விரிவுபடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


புத்தாண்டின் போது விற்பனை ஊக்குவிப்பு என்ற பேரில், பல்வேறு வியாபார நிறுவனங்கள் பருவகால கழிவு விலைப் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதை கண்காணிக்கும் வகையிலேயே, இத்திட்டத்தை அமுல் படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை மோசடி வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், மிகக் குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 05 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பாவனையாளர்களை பாதுகாப்பதே எமது உயரிய நோக்கமாகும். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நாடு முழுவதும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-RB

No comments:

Post a Comment