அமைச்சுப் பகிர்வில் இழுபறி? ஐ.தே.க அழுத்தம்! - sonakar.com

Post Top Ad

Thursday 19 April 2018

அமைச்சுப் பகிர்வில் இழுபறி? ஐ.தே.க அழுத்தம்!


மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலசுகட்சி முழுமையாகப் பலவீனமடைந்துள்ள நிலையில் மக்களுக்கு நேரடி சேவைகளை வழங்கக் கூடிய மேலும் சில அமைச்சுப் பொறுப்புகளை தம்மிடம் ஒப்படைக்க வலியுறுத்தி வருகிறது ஐக்கிய தேசியக் கட்சி.தற்போது லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி இது தொடர்பில் பதிலளிக்காதமையால் தொடர்ந்தும் இழுபறி நிலவி வருவதோடு சமுர்த்தி, விவசாயத்துறை அமைச்சுக்கள் சு.க வசம் இருப்பதில் பிரயோசனமில்லையென ஐ.தே.க தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

23ம் திகதிக்குள் அமைச்சரவை மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இதுவரை தீர்க்கமான முடிவுகள் எட்டப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment