அந்த '16' பேரும் இனி எங்களோடு தான்: விமல் நம்பிக்கை! - sonakar.com

Post Top Ad

Sunday, 8 April 2018

அந்த '16' பேரும் இனி எங்களோடு தான்: விமல் நம்பிக்கை!


ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்ததோடு தம்மை அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள ஸ்ரீலசுகட்சி பிரமுகர்கள் 16 பேரும் இனி கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து பணியாற்றப் போகிறார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் விமல் வீரவன்ச.குறித்த நபர்கள் மஹிந்த - மைத்ரி இரு அணியையும் தவிர்த்து தனியாக மேதினம் கொண்டாடவும் திட்டமிட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுமாறு ரணில் விக்கிரமசிங்க தமது கட்சிக்காரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியும் அவர்களை விடுவிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்காத நிலையில் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment