2017ம் ஆண்டின் க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் நாளை மறுதினம் புதன் கிழமை வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று மாணவர்கள் தடை செய்யப்பட்டிருந்த அதேவேளை 969 மாணவர்களின் பெறுபேறுகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமை போன்று இணையம் ஊடாகவும் பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment