ரணிலை விரட்ட பதவியிழக்கவும் தயார்: நிசாந்த - sonakar.com

Post Top Ad

Friday, 23 March 2018

ரணிலை விரட்ட பதவியிழக்கவும் தயார்: நிசாந்த


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து கொண்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்கள் பதவியிழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கும் தாம் தயார் என தெரிவித்துள்ளார் பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே.

ஜனாதிபதி தேர்தலின் போது மைத்ரிபால சிறிசேனவின் மேடையையும் எரியூட்டிய தீவிர மஹிந்த ஆதரவாளரான நிசாந்த, பின்னர் கூட்டாட்சியில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டார்.இந்நிலையில், தற்போது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து இறக்குவதற்கான நடவடிக்கையில் தாம் பதவியிழக்கவும் தயார் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment