கை மாறிய காலி - நீர்கொழும்பு மாநகர சபைகள்; களிப்பில் மஹிந்த அணி - sonakar.com

Post Top Ad

Friday 23 March 2018

கை மாறிய காலி - நீர்கொழும்பு மாநகர சபைகள்; களிப்பில் மஹிந்த அணிகாலி மற்றும் நீர்கொழும்பு மாநகர சபைகளில் கூடிய ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சி வென்றிருந்த போதிலும் ஆட்சியதிகாரம் மஹிந்த அணி வசமாகியுள்ளது.

இதனடிப்படையில் காலி மாநகர முதல்வராக பிரியந்த சஹபந்து கொடகேவும் நீர்கொழும்பு முதல்வராக தயான் லன்சாகவும் தெரிவாகியுள்ளனர்.இரகசிய வாக்கெடுப்பிலேயே இருவரும் இவ்வாறு வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு சபைகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தமது கட்சி உறுப்பினருக்கு முழுமையாக வாக்களிக்காமல் விட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, ஜே.வி.பி வாக்களிப்பில் பங்கேற்காது தவிர்ந்து கொண்டுள்ளமையும் காலி பிரதி மேயராக ஐக்கிய தேசியக் கட்சியின் பௌசுல் நியாஸ் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment