கடும் பனி - புயல் ; ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் அவதி! - sonakar.com

Post Top Ad

Thursday, 1 March 2018

கடும் பனி - புயல் ; ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் அவதி!எம்மா புயல் மற்றும் கடும் பனியினால் ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளில் கடும் பனி வீழ்ச்சியும் உறைநிலையும் தொடர்வதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தின் M80 நெடுஞ்சாலையில் பிரயாணிகள் 13 மணித்தியாலங்கள் வாகனங்களில் காத்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள அதேவேளை பல்வேறு ஏ ரக வீதிகளில் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.இன்று காலை (உள்ளூர் நேரம்) இன்று காலை 10 மணி வரை சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ள அதேவேளை, லண்டன் உட்பட பெரும்பாலான நகரங்களில் இரவும் கடுமையான குளிர் நிலவியுள்ளது.

பல விமான நிலையங்களில் காலை 11 மணி வரை விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment