வெளிநாட்டு நாணய கடத்தல்; இரு இலங்கையர் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday 1 March 2018

வெளிநாட்டு நாணய கடத்தல்; இரு இலங்கையர் கைது!
டுபாய் செல்லும் விமானத்தில் ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்களைக் கடத்திச் செல்ல முயன்ற இரு இலங்கையர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் மற்றும் கொழும்பைச் சேர்ந்த 47 மற்றும் 45 வயது இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.


குவைத் மற்றும் இலங்கை நாணயத்தாள்களை சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்ல முயன்ற நிலையிலேயே இக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment