கடன் பயங்கரவாதத்தின் தலைவன் யார்? - sonakar.com

Post Top Ad

Tuesday 29 December 2015

கடன் பயங்கரவாதத்தின் தலைவன் யார்?


இன்று வளர்ந்த நாடுகளும் வளர்முக நாடுகளும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற பாரிய சவாலாக கடன் பயங்கரவாதம் காணப்படுகின்றது.உலகெங்கும் நிலவும் கடனும் அந்த கடன் போட்ட கூட்டு வட்டியும் 3 ஆம் மண்டல நாடுகளை தாங்கிக் கொள்ள முடியாதளவு தாக்கிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்தும் இந்நிலை நீடித்தால் ஆபிரிக்க கண்டத்திற்கு ஏற்பட்ட வறுமை என்னும் சிக்கன்கூன்யா வைரஸ் விரைவில் ஆசிய பிராந்தியத்திற்கு அதுவும் தெற்கு,கிழக்காசியாவுக்கு தொற்றக் கூடிய வாய்ப்புள்ளது.

அதிகரித்த கடனும் கடன் போட்ட கூட்டு வட்டியும் வளர்முக நாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டி சூப்புப் போட்டு விட்டது.அதிகரித்த பணவீக்கம்,அன்னியசெலாவணி பற்றாக்குறை பங்குசந்தை வீழ்ச்சி,ஊழல் மோசடிகள்,பொருள்களுக்கான சரியான கேள்வி நிரம்பல் இன்மை உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி,சேவைக் கைத்தொழில் தனியார் துறையின் அத்துமீறிய ஆதிக்கம் எல்லாம் ஒருமித்து வளர்முக நாடுகள்,உலக வங்கியிடமும் ஐ.எம்.எப் இடமும் இன்னும் இன்னோரன்ன நிதி நிறுவனங்களிடமும் பெற்ற கடனையும் அந்த கடன் போட்ட கூட்டு வட்டியையும் கட்ட முடியாமல் திக்குமுக்காடிப்போயுள்ளன.

வறுமையின் வக்கிரக் கொடுமை காரணமாக இன்று உலகம் முழுவதும் தெருவிலே பிறந்து தெருவிலே வளர்ந்து தெருவிலே தன்னுடைய வாழ்க்கை கோலத்தை நிறைவு செய்யும் மக்களின் தொகை 10 கோடியையும் தாண்டி விட்டது.அதுமட்டுமல்ல வாழ்கை என்னும் அத்தியாயத்தை ஒழுங்காகக்கூட வாழ்ந்து முடிக்கத் தெரியாமல் வாழத்தேவையான உணவு உடை,இருப்பிட வசதியில்லாமல் இருப்போரின் தொகையும் ஆறு பூச்சியத்தையும் தாண்டி விட்டது.

பொருளியல் வல்லுனர்களின் கருத்துப்படி தெற்காசியா பிராந்திய மக்களின் இயல்பு வாழ்கை கடந்த  2 தசாப்தங்களுடன் ஒப்பிடும் போது தற்போது பாரிய மாற்றத்துக்குள்ளாகியுள்ளது. வசதி படைத்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து குறிப்பிட்ட சிலரிடம் பெருந்தொiயான பணம் தங்கியுள்ளது.அதே போன்று வசதியற்றவர்களின் தொகை இன்னும் படு மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது என எச்சரித்துள்ளனர்.ஆம் மேற்கூறிய முதுபெரும் வல்லுனர்களின் கருத்துப்படி தெற்காசிய நாடுகளில் சில தசாப்த காலத்துக்கு முன் இல்லாதளவு இன்று சேரிப்புற வாழ்விடங்கள் அதிகரித்துள்ளன.மட்டுமில்லாமல் வறுமை காரணமாக கல்வி கற்போரின் தொகை குறைவடைந்து பாதையோரங்களிலிருந்து வீடு வீடாக யாகசம் கேட்போரின் தொகை அதிகரித்துள்ளது.

தெற்காசிய நாடுகளுக்கே இந்நிலை என்றால் ஆபிரிக்க கண்டத்தை பற்றி கேட்கவும் வேண்டுமா? ஆம் நான் உட்பட நீங்கள் நினைத்தது சரி.இன்று பொது அறிவுக்காக பஞ்சம் பட்டினிக்கு பேர் போன கண்;டம் என்றால் அது ஆபிரிக்க கண்டம் என்று கூறுவர்.வறுமையின் கோரப்பிடியினை ஆபிரிக்க மக்களை பார்த்துத்தான் நாம் வரைவிலக்கணம் செய்வோம்.நெஞ்சுக்கூட்டின் எலும்புகள் எத்தனை என்று எண்ணிவி;டலாம்.நம்மூரில் இருக்கும் சாதாரண ஒரு மனிதர் எதியோப்பிய,சோமாலிய நாட்டு 10 பேரை இரண்டு கைகளால் தூக்கி விடுவார்கள்அந்தளவு உடல் எடை கொண்டவர்கள்.ஆனால் ஒரு காலத்தில் மூலவளங்கள் அதிகம் நிறைந்த கண்டமாக காணப்பட்டது ஆபிரிக்கா தான்.பிறகு அதுவே அதற்கு கண்டமாக மாறிவிட்டது.மேற்கத்தைய வணிக நிறுவனங்கள் முகாம் போட்டு தங்கி,இருப்பதை சூறையாடி விட்டு போகும் போது நாமத்தை போட்டு விட்டு சென்று விட்டார்கள்.

முதளாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றுகிற நாடுகளும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற நாடுகளாக இருக்கின்றன.முதளாளித்துவப் பொருளாதாரத்தை ஜென்ம விரோதியாக நினைக்கின்ற,சோசலிஸ கொள்கையை பின்பற்றுகிற நாடுகளும் வறுமையில் வாடுகின்றன.உலகின் மிகப்பெரிய சோசலிஸ அரசாங்கமாக இருந்த முன்னாள் சோவியத் யூனியனிலும் எத்தனை தடைவ பஞ்சம் பட்டினி ஏற்பட்டது என்பது எமக்குத் தெரியும்.

ஆபிரிக்க கண்டத்தையும் ஆசிய கண்டத்தையும் பஞ்சத்திற்கே உரிய கண்டமாக மாற்றிக் கொண்டிருப்பது சர்வதேச கடனே.இந்த சர்வதேச கடன் பொறிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்க உள்ளுர் ஊழல்,நிர்வாக மோசடி என்ற சிற்சில சில்லறை காரணங்களை விடுத்து குறிப்பிட்ட சர்வதேச சக்த்pகளும்,அமைப்புகளும்,சில மேற்கத்தைய நாடுகளும் தங்களுடைய அரசியல் பொருளாதார சுய நலனை நிறைவேற்றிக்கொள்ள எப்படி கடன் வலைக்குள் சிக்க எவ்வகையான சூழ்ச்சிகளையும் கபட நாடகங்களையும் அரங்கேற்றுகின்றன எனபதை தொட்டு காட்டுவதே இக்கட்டுரையின் இலக்காகும்.

வறுமையில் துவண்டு கொண்டிருக்கின்ற அல்லது பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற தேசங்களை தேடிப் பிடித்து உதவி செய்வதில் வல்லவர்கள் உலக வங்கியும் மேற்கத்தையே நிதி நிறுவனங்களும்.உங்களுடைய பொருளாதாரத்தை திறந்து விடுங்கள்,பொருளாதார நெறுக்கடிக்கு உங்கள் கொள்கையே காரணம் என்பார்கள்.அப்போது இந்த நாடுகளின் தலைவர்களோ ஆமாங்க நீங்க சொல்ரதும் சரிதான் நாங்க இந்த ஏங்கள்ள யோசிக்கல என ஆமா சாமி போடுவார்கள்.பிறகென்ன பங்குடைமை சந்தை முறையை அறிமுகம் செய்யுங்கள்,தனியார் துறைக்கு இடமளியுங்கள் என கடனையும் தந்து கூடவே கன்னி வெடியையும் வைத்து விட்டு செல்வார்கள்.

ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட திகதியிலிருந்து வட்டி ஒவ்வொரு வருடமும் ஏறிக் கொண்டே இருக்கும் குறிப்பிட்ட காலம் வந்ததும் நிலமை மோசமாகி வட்டித் தொகையோ எகிறிவிடும்.நாம் விரித்த வலையில் மாட்டிக் கொண்டார்கள் என உலக வங்கியும் மேற்கத்தைய நாடுகளும் மகிழ்ச்சி குதூகலத்தில் இருப்பார்கள்.ஆனால் கடன் பெற்ற நாட்டுக்கு அன்றிலிருந்து தான் சனி பிடித்துவிடும்.ஒரு விவசாயியின் கதையை எடுத்து கொள்ளுங்கள் மாதத்திற்கு இத்தனை வட்டி என பணத்தை பெற்று விவசாயம் செய்வார்.விவசாயத்தின் விளைவு இலாபமாக இருந்தால் படு ஜோருதான் விவசாயிக்கு.ஆனால் நேர் எதிராக நஸ்டம் வந்தால் விவசாயியின் நிலை அதோ கெதிதான்.குடும்பத்தோடு தற்கொலை செய்யும் நிi ஏற்படும் அதே போல தான் உலக வங்கியும் ஐ.எம்.எப் கடனும் ஓவ்வொரு வருடமும் பெருந்தொகையான அதாவது பில்லியன் கணக்கான தொகையை கட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

எமக்கு ஏதாவது கடன் இருந்தால் சாப்பிடக்கூட நினைக்க மாட்டோம் எப்படிசரி அட்ஜச் பண்ணி கடனை கட்ட நினைப்போம்.அது போல தான் நாடுகளும் உள்நாட்டு விவகாரங்களை எல்லாம் கொஞ்சம் குறைத்து கடனையே கட்டுவதில் குறியாக இருக்கும்.உள்நாட்டு கல்வி,மருத்துவம,;சுகாதாரம்,பாதுகாப்பு,குடிநீர் என ஒரு துறைக்கும் ஒழுங்காக ஒதுக்க முடியாத நிலையில் நாடு தத்தளிக்கும் இயல்பாகவே பொருளாதார ஸ்திரமற்ற வறுமை தேசமாக மெல்லமெல்ல நாடே நகரும்.ஆனால் ஐ.எம்.எப் க்கும் உலகவங்கி காட்டில் தொடர்ந்தும் மழைதான்.

கடன் காரணமாக பட்ஜட் சரியாக அடிப்படை விடயங்களுக்கு ஓதுக்க முடியாத நிலையினால் உணவோ மருந்தோ வாங்க பணமின்றி 3 ஆம் மண்டல நாடுளில் லட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டு தோரும் செத்து மடிகின்றனர்.கடன் தொகையும் குறைந்து கொண்டு சரி போகும் என்றால் அதுவும் முடிந்த பாடில்லை.2014 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தற்போதைய பிரதம மந்திரி; பிறக்கின்ற குழந்தை கூட பல அமெரிக்க டொலர ;பணம் கடனாக செலுத்த வேண்டியளவு கடன் தொகையுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.2000 ஆம் ஆண்டு ஜி 8 மாநாட்டில் நைஜிரிய நாட்டு அதிபர் ஒபசஞ்சலோ இவ்வாறு குறிப்பிட்டார்.1985 ஆம் ஆண்டு நாங்கள் பெற்ற கடன் என்னவோ 5பில்லியன்தான்.இதுவரை 16 பில்லியன் திருப்பி வெலுத்திவிட்டோம் ஆனால் இன்னும் 26 பில்லியன் இருக்கிறது என்கிறார்கள்.

அந்நிய நிறுவனங்னகளின் அநியாய வட்டி தான் இதெல்லாம். நைஜிரிய நாட்டு அதிபரின் நிலை இவ்வாறென்றால் மற்றைய நாடுகளை பற்றி சொல்லதேவயில்லை.கடன் வாங்கிய நாடுகளின் நிலமையை பற்றி தெரிந்து கொள்ள இன்னும் ஒன்று இருக்கின்றது கூறிவிடுகின்றேன் முடிவெடுக்க இலகுவாக இருக்கும.;வளர்முகநாடுகள் அவை வாங்கிய கடன்களை கூட்டு வட்டி போட்டு பல பில்லியன் தொகையை செலுத்தும் போது அமெரிக்காவானது 300 பில்லியன்அமெரிக்க டொலருக்கு கடனாக கட்டும் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 20 பில்லியன் டொலர் தான்.அத்தோடு 3 ஆம் மண்டல நாடுகள் செலுத்தும் வட்டியும் இவர்களின் மடிக்குத்தான் செல்கின்றது.

எலும்பும் தோலுமாக ஆபிரிக்காவின் பல நாடுகள் பட்டினியால் வாடுவதை பார்த்து நாம் சிம்பத்தி மைண்டில் பாவம் வளப்பாற்றாக்குறையுள்ள வறுமை தேசங்கள் என கவலைப்படுகிறோம்.உண்மை நிலை அதுமட்டுமல்ல,இந்த கடன் பயங்கரவாதம் தான் அவர்களை அந்த நிலமைக்கு ஆளாக்கியுள்ளது.நைஜர் என்ற ஆபிரிக்கா நாடு கல்வி,மருத்துவம் ஆகிய துறைக்கு ஒதுக்குகின்ற தெகையை விட மூன்று மடங்கு அதிகமான தொகையை கடன் தவணைக்கும் வட்டிக்கும் ஒதுக்குகின்றது.1980 களில் உலகின் பரம ஏழைகளில் பத்தில் ஒருவர் ஆபிரிக்கராக இருந்தனர்.இன்று மூன்றில் ஒருவராக இருக்கின்றனர்.இங்கு இன்னுமொன்றை குறிப்பிடலாம் உலகிலேயே அதினமான எயிட்ஸ் நோயாளிகளை கொண்ட கண்டம் ஆபிரிக்கா தான்.காரணம் என்;ன தெரியுமா?இந்நாடுகள் நோய்க்கான மருந்து தொகைக்கு ஒதுக்கின்றதை விடஅவை கடன் கட்டுவதே காரணம் என சர்வதேச மருத்துவ விற்பன்னர்கள் குறிப்பிடுகின்றனர்.

உலக வங்கி ஐ.எம்.எப் என்பவை கடன்களை வழங்கி விட்டு நல்ல ஆலோசனைகளை தந்து குழப்பி விட்டு செல்வார்கள் என மேலே குறிப்பிட்டேன்.அவர்கள் கூறியதொன்று எவ்வாறு எமது நாட்டிலும் தாக்கம் செலுத்தியுள்ளது என்பதை பாருங்கள்.வர்த்;கத்தை இன்னும் தாராளமயமாக்குங்கள் பல சர்வதேச நிறுவனங்கள் உங்களோடு வர்த்தகம் புரிய தாயாரக உள்ளன என்பர்.கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவுக்கு விற்பனை செய்வதற்காக பல பில்லியன் கணக்கு பணத்தை ஒதுக்கி முன்னாள் அரசாங்கம் துறைமுக நகரத்தை நிர்மாணித்துக் கொண்டிருந்தது.ஆனால் அரசாங்கம் மாறியதும்அது சுற்றுசூழல்அதிகார சபையிடம் அனுமதி பெறவில்லை என நிறுத்திவைக்கப்பட்டடுள்ளது.ஆக இதன் மூலம் பல பில்லியன் ரூபா நதி நஷ்டமாக்கப்பட்டுள்ளது.இதற்காக பெற்ற கடனையும் வட்டியையும் அரசாங்கம் திருப்பி செலுத்த வேண்டும்.அரசாங்கம் என்ன செய்யும் தெரியுமா மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் சிலவற்றை முடக்கி பொருள்களின் விலையை உயர்த்தி பெற்றுக் கொள்ளும் இப்போது புரிகிறதா? கடன் பயங்கரவாதத்தின் தலைவன் யார் என.

3 ஆம் மண்டல நாடுகள் வர்த்தகத்தை திறந்து கொடுப்பதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட நாட்டில் வந்து முதலீடுகளை செய்ய ஆரம்பிக்கும்.என்ன துறைகளில் கூடுதலான பெனிபிட் கிடைக்குமோ அவற்றில் மாத்திரமே முதலீடு செய்யும்.அதற்கான நிலப்பரப்பு,மின்சாரம்,ஊழியர் என அனைத்தையும் ஒப்பந்த அடிப்படையில் அரசு செய்து கொடுக்க வேண்டும்.மக்களுக்கு போக வேண்டிய நிதியில் குறிப்பிட்ட தொகையை எடுத்து அம் முதலீட்டு அமைப்புகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்.காரணம் அவர்கள் மூலம் நாடு இன்னும் செழிப்பாக வேண்டும் என்ற நோக்கில் அதுவும் நடைபெறாது என்றில்லை.வெளித்தோற்றத்தில் தலை நகரத்தில் பலஅடுக்குமாடிக்கட்டட மல்ட்டி நெசனல் கொம்பனிகள் காணப்படும்.3ஆம் மண்டல நாடுகளின் தலை நகரங்கள் என்னவோ அமெரிக்காவின் நீயுயோர்க் மாநிலம் போல தான்; காணப்படும்.ஆனால் முடிவோ ஜுஸ் போட்டலை ஸ்ட்ரோ  போட்டு உறிஞ்சி குடித்து விட்டு அதை தூக்கி எறிவது போல சுரண்டும் வரை சுரண்டி விட்டு தூக்கி வீசிவிடுவார்கள்.

மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தோற்றம் பெற்ற அரசு என்னும் வரைவிலக்கனத்திற்கு மாற்றுக் கருத்து கொடுக்க வேண்டியது  போல,அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொடுக்க முடியாமல் பொருளாதாரத்தில் நலிவுற்று நினைவு தெரிந்த நாளில் இருந்து வறுமை தேசங்களாக அல்லது வளர்ந்து வருகின்ற நாடுகளாக 3 ஆம் மண்டல நாடுகள் இருப்பதற்கு காரணம் மேற்கத்தைய நாடுகளும் அவற்றின்அமைப்புகளும் திட்டம் தீட்டிய கடன் பயங்கரவாதமே.

பாரூக் பஸ்மில் கான்
களு/அலவியா மு.ம.வி,பாணந்துறை

No comments:

Post a Comment