வசீம் கொலை: நீதிபதி நிசாந்த பீரிசின் இடமாற்றம் ரத்து! - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 December 2015

வசீம் கொலை: நீதிபதி நிசாந்த பீரிசின் இடமாற்றம் ரத்து!


வசீம் கொலை விவகாரத்தை விசாரித்து வந்த நீதிபதி நிசாந்த பீரிசின் இடமாற்றம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அவருக்கு மேலும் ஒரு வருட காலம் கொழும்பிலேயே பணியாற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிபதி கிஹான் பிலாபிட்டியவுக்கும் இவ்வாறே ஒரு வருடம் தொடர்ந்து கொழும்பில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வசீம் கொலை விவகாரத்தின் தீர்ப்புக்கான நேரம் நெருங்கியுள்ளதாக கருதப்படும் நிலையில் நீதிபதி மாத்தறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னணியில் பாரிய விமர்சனங்கள் எழுந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment