வரக்காப்பொலயில் கோர விபத்து: குழந்தை உட்பட ஐவர் மரணம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 December 2015

வரக்காப்பொலயில் கோர விபத்து: குழந்தை உட்பட ஐவர் மரணம்


வறக்காபொல தும்மலதெனிய பகுதியில் இன்று (30) காலை இடம்பெற்ற விபத்தில் 5பேர் பலியானதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒரு குழந்தை, மூன்று பெண்கள், ஒரு ஆண் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். பிலியந்தலையிலிருந்து சோமாவதிக்கு யாத்திரீர்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த பஸ்ஸும், சம்மாந்துரையிலிருந்து கொழும்பை நோக்கி வந்துக்கொண்டிருந்த வேனுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேனில் பயணித்தவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காகவே சம்மாந்துரையிலிருந்து அவர்கள் வானில், வந்துள்ளனர். வானில் பயணித்த அனைவரும் என்றும் இவ்விபத்தில் பலியானவர்கள் என்பதோடு, அவர்களுடைய ஜனாஸா வறக்காபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

-சுலைமான் றாபி

No comments:

Post a Comment