முண்டியடித்து 'கெட்ட பயர்' எடுக்கத் தான் வேண்டுமா: அசாத் கேள்வி! - sonakar.com

Post Top Ad

Monday 11 May 2020

முண்டியடித்து 'கெட்ட பயர்' எடுக்கத் தான் வேண்டுமா: அசாத் கேள்வி!

https://www.photojoiner.net/image/g5xj9xnn

கொரோனா கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாக தளர்த்தப்படாத நிலையில் கொழும்பு, புறக்கோட்டை பகுதிகளில முஸ்லிம் சமூகத்தினர் முண்டியடித்துக் கொண்டு சென்று பிரச்சினைகளை விலைக்கு வாங்குவதாக விசனம் வெளியிட்டுள்ளார் முன்னாள்  மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.

பெரும்பாலும் பெண்களே இவ்வாறு காணப்பட்டுள்ள நிலையில், பொலிசார் கூட உங்கள் சமூகத்தின் நிலையைப் பாருங்கள் என்று தெரிவிப்பதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உட்பட பெரும்பாலான அமைப்புகள் இது தொடர்பில் விழிப்புணர்வூட்டியும் மக்கள் இவ்வாறு நடந்து கொள்வது வேதனையளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெருநாள் ஷொப்பிங் என்ற பெயரில் அவசரம் காட்ட வேண்டிய சூழ்நிலை தற்போது இல்லையெனவும் சமூகப் பொறுப்புடனும், பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும், குறிப்பாக ஆண்கள் தம் வீட்டுப் பெண்களை இவ்விடயத்தில் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் சோனகர்.கொம்முக்கு அவர் தெரிவித்த கருத்துக்களின் ஒலிப்பதிவு:

No comments:

Post a Comment