ஓட்டமாவடி - பி'சேனை பகுதிகளில் போதைப் பொருளுடன் மூவர் கைது - sonakar.com

Post Top Ad

Monday, 11 May 2020

ஓட்டமாவடி - பி'சேனை பகுதிகளில் போதைப் பொருளுடன் மூவர் கைது


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மற்றும் பிறைந்துரைச்சேனை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் திங்கள் இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். 

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் துசிதகுமார மற்றும் பொலிஸ் சார்ஜன் எம்.பி.எம்.தாஹா ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக 1160 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதன்போது ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து 580 மில்லிகிராம் போதைப் பொருளும், பிறைந்துரைச்சேனை பகுதியில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து 540 மில்லிகிராம் போதைப் பொருளும், வாழைச்சேனை பகுதியில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 40 மில்லிகிராமுமாக மொத்தம் 1160 மில்லிகிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

 

No comments:

Post a Comment