ACJUவின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி - sonakar.com

Post Top Ad

Saturday 23 May 2020

ACJUவின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி


கொவிட் 19 காரணமாக மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில்  ஒரு மாத காலம் தொடராக நோன்பு நோற்று, நற்காரியங்களில் ஈடுபட்டு விட்டு இன்று பெருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம்;களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது. அல்லாஹுதஆலா நாம் நோற்ற நோன்பை அங்கீகரித்து அவனது உயரிய நற்கூலியை தந்தருள வேண்டுமென பிரார்த்தனையும் செய்கின்றது.

எமது நாட்டையும், நாட்டு மக்களையும் கொவிட் 19 யின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு வழமை போன்றல்;லாது சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினரின் வழிகாட்டல்களைப் பூரணமாக ஏற்று மிகவும் எளிமையான முறையில் தத்தமது குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் வீட்டில் இருந்த படியே இம்முறை பெருநாளைக் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றோம். தொடர்ந்தும் எமது தாய்நாட்டை இந்த தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் உறுதிபூண்டு ஒற்றுமையுடன் ஒன்றாக செயற்பட அல்லாஹுதஆலா  அருள் புரிய வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம்.

இவ்வினிய தினத்தில் இஸ்லாமிய போதனைகளை உரிய முறையில் பின்பற்றுவதுடன் முழு உலக மக்களும், குறிப்பாக எமது தாய் நாடும்; இந்த வைரஸின் தாக்கத்திலிருந்து விடுபட அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்.

இந்த வைரஸ் தொற்றிலிருந்து எமது நாட்டை மீட்டெடுப்பதற்காக பாடுபடும் அரசாங்கம், அரச ஊழியர்கள், உத்தியோகத்தர்கள்; மற்றும் இந்த நெருக்கடி சூழ்நிலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளை வழங்கி வரும்; சுகாதார சேவைப் பணியாளர்கள், முப்படைகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இன்றைய இனிய நோன்புப் பெருநாள் தினத்தில் மனமார்ந்த நன்றிகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கின்றது.


அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment