ஜனாதிபதிக்கு கொரோனா என்று பரப்புரை செய்தவருக்கு விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Monday, 6 April 2020

ஜனாதிபதிக்கு கொரோனா என்று பரப்புரை செய்தவருக்கு விளக்கமறியல்


ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்புரை செய்த நபருக்கு ஏப்ரல் 9ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.வாத்துவ பகுதியைச் சேர்ந்த திலினி மாத்துவகே என்பவருக்கே இவ்வாறு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

தனது முகப்புத்தக பக்கம் ஊடாக ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிருப்பதாக பிரச்சாரம் செய்த குறித்த நபர், அது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எனவும் தெரிவித்து வந்த நிலையில் இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment