அக்குரணை நபரின் குடும்பத்தினருக்கு மேலதிக பரிசோதனை - sonakar.com

Post Top Ad

Monday, 30 March 2020

அக்குரணை நபரின் குடும்பத்தினருக்கு மேலதிக பரிசோதனை


அக்குரணையின் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் குடும்பத்தினரை மேலதிக பரிசோதனைகள் செய்வதற்காக வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்றியிருக்கலாம் எனும் சந்தேகத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனைகளில் பாதிப்பு எதுவும் இல்லையென தெரிவிக்கப்படுகின்ற போதிலும் மேலும் உறுதிப்படுத்துமுகமாக அவர்களுக்கு மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னரே குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் உறுதியான தகவலைச் சொல்ல முடியும் என  கண்டி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

-ஜே.எப்.காமிலா பேகம்

No comments:

Post a Comment