அருவக்காட்டில் 'டைட்டானியம்' : விமலுக்கு சந்தேகம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 February 2020

அருவக்காட்டில் 'டைட்டானியம்' : விமலுக்கு சந்தேகம்!

https://www.photojoiner.net/image/flLMnf1k

புத்தளம் - அருவக்காடு பகுதியில் டைட்டானியம் இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள விமல் வீரவன்ச அதற்கான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கிறார்.



முன்னர் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்பட்ட சுண்ணாம்புக் கல் அகழ்வுப் பணியை தற்போது தனியார் நிறுவனம் ஒன்று செய்து வரும் நிலையில் அங்கிருந்து எடுக்கப்படும் மண் கடுஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுவதாகவும் இது டைட்டானியம் இருப்பதற்கான அறிகுறியெனவும் சந்தேகம் வெளியிட்டுள்ள அவர், அதற்கான பரிசோதனை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கிறார்.

குறித்த பிரதேசத்தில் டைட்டானியம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் இலங்கை வர்த்தகத்துறைக்கு பாரிய பங்களிப்பு கிடைக்கும் என விமல் மேலும் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment