மஹர பள்ளிவாசல்: அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Wednesday 26 February 2020

மஹர பள்ளிவாசல்: அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை


மஹர சிறைச்சாலை வளாகத்தில் இயங்கி வந்த பள்ளிவாசல் அபகரிக்கப்பட்டு, அங்கு பௌத்த வழிபாடுகள் நடந்து வருவது தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன.



ஈஸ்டர் தாக்குதலின் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அங்கு முஸ்லிம் சமய வழிபாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நீண்ட நாட்கள் கைவிடப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றைத் தாம் புனரமைத்துள்ளதாகக் கூறி இம்மாதம் 5ம் திகதி சிறைச்சாலை நிர்வாகம் அதனைத் திறந்து வைத்து பௌத்த வழிபாடுகளையும் நடாத்தியிருந்தது.

அதன் பின்னர், அதனை ஓய்வு அறையாக அறிவித்து அங்கு புத்தர் சிலையொன்றும் வைக்கப்பட்டு தொடர்ந்தும் வழிபாடுகள் நடந்து வருகின்ற அதேவேளை, இந்த அபகரிப்பை தற்போதைய நிர்வாகத்தின் சாதனையாக குறித்த தரப்பினர் பரப்புரை செய்து வருகின்றனர். இந்நிலையில், நிதியமைச்சர் மற்றும் சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சரை சந்தித்து இது பற்றிக் கலந்துரையாடுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக சமூகப் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான தருணங்களில் பெரும்பாலும் நாட்டின் 'தலைவர்களுக்கு' தகவல் தெரியாமல் போகும் வழக்கம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment