நாடாளுமன்றை இழுத்து மூடினால் நாட்டுக்கு இலாபம்: விதுர - sonakar.com

Post Top Ad

Thursday 13 February 2020

நாடாளுமன்றை இழுத்து மூடினால் நாட்டுக்கு இலாபம்: விதுர


ஒவ்வொரு அமர்வின் போதும் ஆகக்குறைந்தது 92 லட்ச ரூபா செலவில் இயங்கும் நாடாளுமன்றை இரண்டு மூன்று வருடங்களுக்கு மூடி வைத்தாலும் நாட்டுக்கு ஒரு இழப்பும் வரப்போவதில்லையென தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க.



சாதாரண நாடாளுமன்ற அமர்வில்லாத நாட்களிலும் தினசரி 87 லட்ச ரூபா செலவிலேயே பராமரிக்கப்பட்டு வரும் இக்கட்டிடத்துக்குள் தற்போது நாட்டுப் பிரச்சினைகள் பேசப்படுவதில்லை, கண்ணியம் காக்கப்படுவதில்லை மாறாக நாடாளுமன்றை மூடி வைத்து விட்டு அந்தப் பணத்தை ஏழை எளிய மக்களுக்காக செலவு செய்யலாம் என விசனம் வெளியிட்டுள்ளார் விதுர.

நாடாளுமன்றின் கண்ணியம் காக்கத் தெரியாதவர்கள் கூர்மையான ஆயுதங்களோடு உள் நுழைவதோடு அநாகரிகமான சொற் பிரயோகங்களுடன் நாடாளுமன்றின் மதிப்பைக் குறைத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment