முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்கவே நாடகங்கள்: அசாத் சாலி! - sonakar.com

Post Top Ad

Monday 17 February 2020

முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்கவே நாடகங்கள்: அசாத் சாலி!


ஆட்சியிலிருந்த இரண்டு கட்சிகளும் சிறிய சலுகைகள் ஊடாக முஸ்லிம் சமூகத்தை தற்காலிகமாகத் திருப்திப் படுத்தி பின்னர் ஏமாற்றியே வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.



பெருந்தேசிய கட்சிகள் காலாகாலமாக இதையே செய்து வரும் நிலையில் முஸ்லிம் சமூகத்தின் வாக்குப் பலத்தை சிதறடிக்காமல் நல்ல முறையில் சிந்தித்து தேசிய சக்திகளுடன் இணைந்து கட்டியெழுப்ப வேண்டிய தருணம் நெருங்கியிருப்பதாக அவர் மேலும் தெரிவிக்கிறார். தேசிய ஐக்கிய முன்னணி எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சோனகர்.கொம்முடன் உரையாடிய அவர் மேலும் தெரிவிக்கையில், முற்போக்கு சக்திகளுடன் இணைந்து முஸ்லிம் சமூகம் தமது அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டுமே தவிர இனியும் முஸ்லிம் அடையாள அரசியல் எனும் வட்டத்துக்குள் தரித்து நிற்க முடியாது எனவும் தெரிவிக்கிறார்.

இந்நிலையில், சோரம் போகாத நிலையில் தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய சமூகமாக மாற வேண்டிய தேவையிருப்பதாகவும் பெரிய கட்சிகளின் தயவில் வாழும் நிலைக்கு அப்பால் தேசிய சக்திகளுடன் இணைந்து தாய் நாட்டின் அரசியலில் எமது தனித்துவத்தைப் பேண வேண்டும் எனவும், இதனடிப்படையில் தமது கட்சி சார்பு நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலையடுத்து ஏற்பட்ட சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் அனுபவித்த இன்னோரென்ன துன்பங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய ஒரே காரணத்திற்காகவும், இராணுவத்தினர் பள்ளிவாசல்களுக்குள் காலணியுடன் செல்லக்கூடாது என்று கருத்துரைத்ததற்காகவும் தன்னைப் பல  தடவைகள் பாதுகாப்பு படையினர் இதுவரை விசாரித்துள்ளதாகவும் தெரிவிக்கும் அவர், ஏனைய அரசியல் தலைமைகள் இவ்விடயங்கள் மௌனம் காத்ததன் ஊடாக தப்பிக் கொண்டுள்ளதாகவும், அவ்வாறான தலைமைகள் இனியும் எதைச் சாதிக்க முடியும்? என மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் அசாத் சாலி கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment