வாழைச்சேனை: புதையல் தோண்டச் சென்ற பங்காளிகள் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 February 2020

வாழைச்சேனை: புதையல் தோண்டச் சென்ற பங்காளிகள் கைது!


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன், அதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். 


வாழைச்சேனை பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து திங்கட்கிழமை இரவு மேற்கொண்ட தேடுதல் பணியின் போது கிரான் பூலாக்காடு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் கண்டி அல்கடுவ, கோமாகம மற்றும் கோரகல்லிமடு கிரான் பிரதேசங்களை சேர்ந்த மும்மதத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், பூசைப் பொருட்கள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் பொருட்கள் என்பன வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment