முஸ்லிம்கள் 'தவறை' உணர்ந்து விட்டார்கள்: திலும் - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 February 2020

முஸ்லிம்கள் 'தவறை' உணர்ந்து விட்டார்கள்: திலும்


கடந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் இழைத்த தவறை முஸ்லிம்கள் உணர்ந்து விட்டதாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரமுனவுக்கு முழு ஆதரவை வழங்கவுள்ளார்கள் எனவும் தெரிவிக்கிறார் திலும் அமுனுகம.



தெல்தெனிய முஸ்லிம் விரோத வன்முறைகளின் சூத்திரதாரியென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நேரடியாகவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்த திலும் அண்மைக்காலமாக கண்டி நகர முஸ்லிம்களுடன் நெருங்கிய உறவைப் பேணி வருவதுடன் முஸ்லிம் அமைப்புகளும் திலும் மற்றும் லொஹான் ரத்வத்தை அணிக்கு தோள் கொடுத்து வருகின்றன.

இந்நிலையிலேயே, திலும் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment