பொலன்நறுவயில் மந்த கதி; மைத்ரி வாக்களிப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday, 16 November 2019

பொலன்நறுவயில் மந்த கதி; மைத்ரி வாக்களிப்பு!ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொலன்நறுவ ஸ்ரீ வித்தியாலோக விகாரையில் தனது வாக்களிப்பை நிறைவு செய்துள்ள அதேவேளை இதுவரை வெளியான தகவல்களில் பொலன்நறுவயில் வாக்களிப்பு மந்த கதியிலேயே இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.


மீளவும் தேர்தலில் போட்டியிடாத நிலையில் தேர்தல் முடிவு வெளியானதும் ஒதுங்கிக் கொள்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இம்முறை எந்த வேட்பாளரையும் ஆதரித்து பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

எனினும், தொடர்ந்தும் தமது மாவட்ட அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ள மைத்ரி, இன்று பிரதேச மக்களுடன் சுமுகமாக அளவளாவி வாக்களிப்பில் கலந்து கொண்டிருந்தார்.

No comments:

Post a comment