கோட்டாவை ஆதரிப்பதை எதிர்த்து சந்திரிக்கா 4 பக்க கடிதம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 November 2019

கோட்டாவை ஆதரிப்பதை எதிர்த்து சந்திரிக்கா 4 பக்க கடிதம்!ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், பெரமுன வேட்பாளரை ஆதரிக்கத் தீர்மானித்தமை கட்சியின் யாப்பிற்குப் புறம்பானது என தெரிவித்துத் தனது கடுமையான  எதிர்ப்பைக் கடிதம் மூலம் கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.மத்திய குழுக் கூட்டம் எதற்கும் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், கட்சியைப் பிரித்து வேறு கட்சி ஆரம்பித்துள்ளவர்களை சுதந்திரக் கட்சி ஆதரிப்பது மடத்தனம் என விளக்கியுள்ளார்.

இதேவேளை, ராஜபக்ச குடும்பத்தினரை பதவிக்கு வர விடாமல் தடுப்பதே சந்திரக்காவின் இலக்கு என அண்மையில் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment