ரணிலை விட சஜித் எந்த விதத்திலும் சிறந்தவரில்லை: நிமல் - sonakar.com

Post Top Ad

Monday, 30 September 2019

ரணிலை விட சஜித் எந்த விதத்திலும் சிறந்தவரில்லை: நிமல்ஒரு சிலரின் மனதில் சஜித் பிரேமதாச ரணிலை விட சற்று நல்லவர் எனும் அபிப்பிராயம் இருப்பதாகவும் அது முற்றிலும் தவறு எனவும் தெரிவிக்கிறார் நிமல் சிறிபால டிசில்வா.அவர்கள் எல்லோருமே ஒரே போன்ற கொள்கைவாதிகளே என தெரிவிக்கும் அவர், அரச வேலை வாய்ப்பு வழங்குவதற்கு என்ன நடைமுறை என கூட தெரியாத சஜித் பிரேமதாச அதனைத் துஷ்பிரயோகம் செய்திருந்தமையே அதற்கு சான்று என தெரிவிக்கிறார்.

இதேவேளை சஜித் - ரணில் இருவம் சேர்ந்து, அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவார்களா? இல்லையா என்பதை முதலில் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் எனவும் நிமல் சிறிபால தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment