நிகாப் தடை நீக்கப்பட்டதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவுமில்லை - sonakar.com

Post Top Ad

Saturday 24 August 2019

நிகாப் தடை நீக்கப்பட்டதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவுமில்லை



அவசர கால சட்டம் நீடிக்கப்படப் போவதில்லையென்பதோடு முகம் மூடும் வகையிலான ஆடை மற்றும் ஹெல்மட் அணிதலுக்கான தடையும் நீக்கப்பட்டு விட்டதா என்ற கேள்வி சமூக மட்டத்தில் தொடர்கிறது.


இது குறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வினவிய நிலையில் யாருக்குமே தெளிவான தகவல் தெரியவில்லையென்பது சுட்டிக்காட்டத்தக்கது. பல சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துப்படி குறித்த தடைகள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழும், அதனடிப்படையில் அவசரகால சட்டத்தின் கீழும் பதியப்பட்டுள்ளதனால் அவசர கால சட்டம் தொடராவிட்டாலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்னும் நீக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பொதுவாக தற்சமயம் அவசரகால சட்டம் நீக்கப்பட்டிருப்பதனால் இது தொடர்பில் பாரிய கவனம் செலுத்தப்படாது விடினும், இனவாதிகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் இது தொடர்பில் தெளிவான உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை ஜனாதிபதி மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொள்ளுதல் அவசியப்படுகிறது. அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவைத் தொடர்பு கொள்ள இன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கைகூடாத நிலையில் பெரும்பாலான MPக்கள் இது தொடர்பில் குழப்ப நிலையில் உள்ளதால், உத்தியோகபூர்வ தெளிவூட்டல் வெளியாகும் வரை பொறுமை காப்பதே நல்லது என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment