சமூக வலைத்தளங்களில் உலவும் கோட்டாபேயின் போலிச் சான்றிதழ்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 July 2019

சமூக வலைத்தளங்களில் உலவும் கோட்டாபேயின் போலிச் சான்றிதழ்!


கோட்டாபே ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டு விட்டதற்கான சான்றெனக் கூறி சமூக வலைத்தளங்களில் போலியான சான்றிதழ் ஒன்று உலவுகிறது.


இம்மாதம் 5ம் திகதி சிங்கப்பூரில் சிகிச்சைக்காக சென்றிருந்த கோட்டாபே அதே தினம் கொழும்பு, அமெரிக்க தூதரகத்தில் தனது பிரஜாவுரிமையைக் கைவிட்டதாகக் குறிப்பிட்டு இச்சான்றிதழ் உலவுகிறது.

தான் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலேயே தனது அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடப் போவதாக முன்னர் கோட்டாபே தெரிவித்து வந்த நிலையில் நேற்றைய தினம் அவரது ஆதரவாளர்களால் ஏலவே இணையத்தில் காணப்படும் சான்றிதழ் ஒன்று திருத்தியமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

No comments:

Post a comment