பழி சுமக்கும் பௌசி: பதவியேற்க தானே வேண்டியதாக அறிக்கை - sonakar.com

Post Top Ad

Monday 29 July 2019

பழி சுமக்கும் பௌசி: பதவியேற்க தானே வேண்டியதாக அறிக்கை



உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டிலும், முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஏற்பட விருந்த பேராபத்தை தவிர்க்கும் வகையில் பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள், மீண்டும் தங்களது  பதவியை பொறுப்பேற்குமாறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான  ஏ.எச்.எம். பௌசி வேண்டுகோள் விடுத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.



தற்காலிகமாகவே பதவிகளைத் துறப்பதாக கூறிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படியும் பதவியை மீளப் பெறுவது நிச்சயம் எனும் நிலையில், இடையில் ஏற்பட்டுள்ள பிராந்திய மக்கள் சலனத்தை சமாளிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தைகள், ஆவேச அறிக்கைகளின் பின்னணியில் இன்று (29) காலை  அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுடன் தானும் ஹக்கீம் மற்றும் ரிசாதும் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பௌசி தெரிவித்துள்ளதுடன் பிற்பகல் பதவியேற்பு நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment