சஹ்ரானுடன் Facebook தொடர்பு: கோயம்புத்தூரில் ஒருவர் கைது - sonakar.com

Post Top Ad

Thursday, 13 June 2019

சஹ்ரானுடன் Facebook தொடர்பு: கோயம்புத்தூரில் ஒருவர் கைதுஈஸ்டர் தாக்குதல்தாரிகளை வழி நடாத்தியதாக நம்பப்படும் தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத்தின்  சஹ்ரானோடு முகநூல் ஊடாக தொடர்பு வைத்திருந்த கோயம்புத்தூர் நபர் ஒருவர் இந்திய புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அசாருதீன் என அறியப்படும் குறித்த நபர் முகநூலில் கிலாபத் சிந்தனைகள் பற்றிய பக்கம் ஒன்றை நடாத்தி வந்துள்ளதுடன் அதில் ஐ.எஸ். அமைப்பை நியாயப்படுத்தும் வகையிலான பதிவுகளை மேற்கொண்டு வந்ததாகவும் இலங்கை தாக்குதல்தாரி சஹ்ரானுடன் முகநூல் ஊடாக நட்பைப் பேணி வந்துள்ளதுடன் சஹ்ரானின் பேச்சுக்களை பரப்பி வந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கை வந்த இந்திய உளவு நிறுவனம் இங்கிருந்து பெற்றுக்கொண்ட தகவல்கள் ஊடாக இந்தியாவில் மூன்று குழுக்கள் பற்றி விசாரணை நடாத்திக்கொண்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a comment