எங்களுக்கும் சாட்சியமளிக்க வாய்ப்பு வேண்டும்: ஞானசார - sonakar.com

Post Top Ad

Thursday, 13 June 2019

எங்களுக்கும் சாட்சியமளிக்க வாய்ப்பு வேண்டும்: ஞானசார


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜராகி சாட்சியமளிக்கவும் தகவல் வெளியிடவும் தமக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது பொது பல சேனா.ஞானசார மற்றும் திலந்த இணைந்து இக்கோரிக்கையை முன் வைத்துள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் தம்மிடம் இருக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கையெடுக்கவில்லையென்பது உறுதியாகியுள்ள அதேவேளை ஜனாதிபதியின் அலட்சியமே பெரும்பாலும் இது வரை பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விசாரணையை நிறுத்துவதற்கு ஜனாதிபதி முயல்வதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment