பொது நிர்வாக அமைச்சின் சுற்று நிரூபம் மாற்றம்: அபாயாவுக்கு தடையில்லை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 25 June 2019

பொது நிர்வாக அமைச்சின் சுற்று நிரூபம் மாற்றம்: அபாயாவுக்கு தடையில்லை!


பொது சேவைப் பணிகளில் இருக்கும் பெண் ஊழியர்களின் ஆடை விவகாரம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த சுற்று நிருபம் மாற்றப்படுவதற்கான இணக்கப்பாடு அமைச்சரவை மட்டத்தில் எட்டப்பட்டுள்ளது.


இப்பின்னணியில், அபாயா - ஹிஜாப் அணிவதற்கு (தலை மூடுதல்) தடையில்லையென குறித்த சுற்று நிருபம் மாற்றப்பட்டு வெளியிடப்படவுள்ளதாக நம்பப்படுகிறது.

குறித்த அமைச்சின் செயலாளர் ரட்னசிறி இவ்விவகாரத்தில் பிடிவாதமாக இருந்ததுடன் சுற்று நிரூபத்தை மாற்றுவதற்கும் மறுதலித்து வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் புத்தளத்திலிருந்து 157 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள், சிவில் தலைமைகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment