மருத்துவர் ஷாபி தரப்பிலிருந்து அடிப்படை உரிமை மீறல் வழக்கு - sonakar.com

Post Top Ad

Tuesday, 25 June 2019

மருத்துவர் ஷாபி தரப்பிலிருந்து அடிப்படை உரிமை மீறல் வழக்கு


சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்துக் குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவர் ஷாபி தனக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.மருத்துவர் ஷாபி சட்டவிரோத கருக்கலைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டு அதற்கு ஆதாரங்கள் திரட்டப்படுவதாக தெரிவிக்கப்படும் நடவடிக்கையின் பின்னணியில் தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து டி.ஐ.ஜி கித்சிறி ஜயலத் உட்பட அறுவரை எதிராளியாக குறிப்பிட்டு இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர் ஷாபி சார்பில் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் இம்மனுவினை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment