கண்டி: ரதன தேரருக்கு ஆதரவாக சிங்கள வர்த்தக நிலையங்கள் பூட்டு - sonakar.com

Post Top Ad

Sunday, 2 June 2019

கண்டி: ரதன தேரருக்கு ஆதரவாக சிங்கள வர்த்தக நிலையங்கள் பூட்டுஉண்ணாவிரதமிருக்கும் ரதன தேரருக்கு ஆதரவாக திங்களன்று சிங்கள வர்த்தக நிலையங்கள் பூட்டப்படவுள்ளதாக சிங்கள வர்த்தகர்களின் பெரமுன எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.அளுத்கமயிலும் உண்ணாவிரத நிகழ்வு ஏற்பாடாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சியின் தூண்டுதலிலேயே இவ்விடயங்கள் நடந்தேறுவதாக ஆளுங்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளின்றி கண்டி நகருக்குள் பிரயாணங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பிராந்திய உலமாக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment