பதவி விலகுவாரா ரிசாத் பதியுதீன்: கடும் அழுத்தம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 1 June 2019

பதவி விலகுவாரா ரிசாத் பதியுதீன்: கடும் அழுத்தம்!


நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை எதிர்கொள்ளும் நிலையில் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு வலுத்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள மைத்ரி, இது தொடர்பில் ரிசாத் பதியுதீனிடம் பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இரு முஸ்லிம் ஆளுனர்களையும் பதவி நீக்கும் படியும் பௌத்த தரப்பு அழுத்தம் பிரயோகித்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் எதிர்வுகூறப்பட்டு வருகிறது.

பல முனை அழுத்தங்களை சந்தித்து வரும் ரிசாத் பதியுதீன் இராஜினாமா பற்றி சிந்தித்து வருவதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றமையும், சுயாதீன விசாரணைகளுக்கு வழி கொடுக்கும் வகையில் ரிசாத் பதவி விலக வேண்டும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment