தவறிழைத்திருந்தால் Dr ஷாபியை தூக்கிலிடுங்கள்: மரிக்கார் - sonakar.com

Post Top Ad

Monday, 27 May 2019

தவறிழைத்திருந்தால் Dr ஷாபியை தூக்கிலிடுங்கள்: மரிக்கார்சட்டவிரோதமான முறையில் கருத்தடை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் குருநாகல மருத்துவரும் , ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டவருமான மருத்துவர் ஷாபியை தூக்கிலிட வேண்டும் என தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்.சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்து சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த நபருக்கு எதிராக தற்போது 'முறைப்பாடுகளை' முன் வைக்குமாறு பொலிசார் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இரு பெண்கள் தற்போது முறையிட்டுள்ளதுடன் குறித்த நபர் ஆயிரக்கணக்கான பெண்களை இவ்வாறு கருத்தடைக்குள்ளாக்கியுள்ளதாக முன்னர் திவயின தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment