முஸ்லிம்கள் சார்பாக நிவாரண நிதி கையளிப்பு - sonakar.com

Post Top Ad

Monday 27 May 2019

முஸ்லிம்கள் சார்பாக நிவாரண நிதி கையளிப்பு



கடந்த 21.04.2019 ஆம் திகதி நாட்டில் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் சேகரிக்கப்பட்டு நேற்று 26.05.2019 கையளிக்கப்பட்டது.



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையிலான குழுவினர் காடினல் மல்கம் ரஞ்சித் அவர்களை அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து இந்நிவாரண நிதியை வழங்கி வைத்தனர். 

இதன் போது நாட்டின் தற்போதைய நிலைகள் பற்றியும், சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்ப எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வது என்பன போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன.

மேலும் முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இவை தொடர்பாக தாமும் சம்பந்தப்பட்ட தரப்போடு பேசுவதாக காடினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் தெரிவித்ததுடன் இடம் பெற்ற தாக்குதல்களை  சர்வதேச நிகழ்ச்சி நிரலாகவே தாம் பார்ப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

குறித்த சந்திப்பில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி பிரதித் தலைவர் அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத், உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் தாஸிம், ஊடகச் பேச்சாளர் அஷ்-ஷைக் பாஸில் பாறூக், கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகளாக அல்-ஹாஜ் இஸ்மாஈல் மற்றும்;  அல்-ஹாஜ் அஸ்லம் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

-ACJU

No comments:

Post a Comment