ஜும்மா குத்பாவை சிங்கள மொழிக்கு மாற்ற ஹலீம் முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Monday, 13 May 2019

ஜும்மா குத்பாவை சிங்கள மொழிக்கு மாற்ற ஹலீம் முஸ்தீபு


வெள்ளிக்கிழமை ஜும்மா குத்பாக்களை சிங்கள மொழயில் மேற்கொள்வதற்கான அறிவுறுத்தலை மேற்கொள்ள முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடளாவிய ரீதியில் இது கட்டாயப்படுத்தப்படுமா? என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்படவில்லையாயினும் எதிர்வரும் காலத்தில் ஜும்மா குத்பாக்களை சிங்கள மொழியில் மேற்கொள்வதே நல்லதென அமைச்சர் கருதுவதாக அறியமுடிகிறது.

ஏலவே, பல இடங்களில் நடைமுறை நிலவரங்களுக்கு சம்பந்தமில்லாத வகையிலேயே குத்பாக்கள் நிகழ்த்தப்பட்டு வருவதுடன் அவசர குத்பாக்களை நடாத்தவும் நிர்ப்பந்தம் நிலவி வருகின்றமையும், முஸ்லிம்கள் செறிந்து வாழும் சில இடங்களில் சிங்கள மொழி பரீட்சயமற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment