தீவிரவாதிகளுக்கு உதவிய 'நீதிபதி': அசாத் சாலி தகவலால் பரபரப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 6 May 2019

தீவிரவாதிகளுக்கு உதவிய 'நீதிபதி': அசாத் சாலி தகவலால் பரபரப்பு


தீவிரவாத குழுவாக இயங்கிய தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புக்கு நீதித்துறையிலிருந்தும் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாக மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி வெளியிட்ட தகவல் பரபரப்பை உருவாக்கியுள்ளது.இது பற்றி ஆராய்ந்த போது, வக்பு சபை, பிரதேச சபை மற்றும் பொது மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த குழுவினரின் செயற்பாட்டு மையம் ஒன்றை உருவாக்க கிழக்கு மாகாணம், வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த நீதிபதியொருவர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதற்கான தகவல் மற்றும் ஆவணங்கள் ஆளுனருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

இது தொடர்பில் ஜனாதிபதியிடம் ஆவண மூலமான முறைப்பாடொன்றை வழங்கப் போவதாகவும் ஆளுனர் அசாத் சாலி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment