தீவிரவாதிகளின் ரூ 7 பில்லியன் சொத்துக்கள் - 140 மில்லியன் பணம் முடக்கம் - sonakar.com

Post Top Ad

Monday, 6 May 2019

தீவிரவாதிகளின் ரூ 7 பில்லியன் சொத்துக்கள் - 140 மில்லியன் பணம் முடக்கம்


ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் 73 சந்தேக நபர்கள் தொடர்ந்தும் உத்தியோகபூர்வ ரீதியாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் தீவிரவாதிகளுக்குச் சொந்தமான 7 பில்லியன் ரூபா சொத்துக்களம் பல வங்கி வைப்புகள் உட்பட 140 மில்லியன் ரூபா பணமும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


அண்மையில் சஹ்ரானின் சகோதரியிடமிருந்து பெறப்பட்ட 20 லட்ச ரூபா ரொக்கம் உட்பட பல மில்லியன் ரூபா பணம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ள அதேவேளை, நாட்டின் பல இடங்களில் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு வர்த்தக சங்கத் தலைவரும் செல்வந்தருமான தெமட்டகொட இப்ராஹிமின் இரு புதல்வர்களும் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment