தீவிரவாதம்: இஸ்லாமிய சஞ்சிகைகளின் பங்கு குறித்து ஆராய்வு - sonakar.com

Post Top Ad

Monday, 13 May 2019

தீவிரவாதம்: இஸ்லாமிய சஞ்சிகைகளின் பங்கு குறித்து ஆராய்வு


இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்களை நடாத்த தலைமை தாங்கிய சஹ்ரான், சவுதி அரேபியாவிலிருந்து வெளிவரும் தீவிர சஞ்சிகைகளைத் தொடர்ந்து படித்து வந்ததாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் பல்வேறு பெயர்களில் சலபிஸ, வஹாபிஸ கொள்கைகள் மற்றும் கிலாபத், சர்வதேச முஸ்லிம் விவகாரங்களை மையப்படுத்தி இதுவரை கருத்து விதைப்பில் ஈடுபட்டு வந்த சஞ்சிகைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

இலங்கையில் முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு ஜமாத்துகள் தோற்றம் பெற்றதோடு பெரும்பாலான அமைப்புகள் தமது கொள்கையடிப்படையிலான சஞ்சிகைகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்து.

No comments:

Post a comment