பேராதனை பல்கலை பள்ளிவாசல் மூடப்படவில்லை: முஸ்லிம் மஜ்லிஸ் விளக்கம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 1 May 2019

பேராதனை பல்கலை பள்ளிவாசல் மூடப்படவில்லை: முஸ்லிம் மஜ்லிஸ் விளக்கம்


பேராதனை பல்கலைக்ழகத்தில் பள்ளிவாசல் மூடப்பட்டு சீல் பண்ணப்பட்டுள்ளது மற்றும் இஸ்லாமிய உடையை தடை செய்தல் தொடர்பாக 30-4-2019 திகதி ஒரு தமிழ் தேசிய பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட செய்தில் எந்தவிதமான உண்மை தன்மையும்  இல்லை என்பதை பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்  உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றது. 


பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பினர் இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட வெறுக்கத் தக்க  கொடூரமான செயல்கள் ஊடாக நாடு ஸ்தம்பிதம் நிலையை அடைந்திருப்பது நாம் அறிந்ததே. இந்த நிகழ்வின் மூலமாக மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில்  எமது பள்ளிவாயல், முஸ்லிம் பெண்கள் ஆடை தொடர்பாக பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட செய்தில் எந்தவதமான உண்மைத் தன்மையும் இல்லை. 

இது தொடர்பாக பல்கலைக்கழக மஸ்ஜித் நிர்வாகிகளான பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் குறிப்பிடும் போது  பல்கலைக்கழகப் பள்ளியானது பல்லைக்கழகப் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் விரிவுரையாளர்களினால் பார்வையிட்டதாகவும், அதனை தற்சமயம் மாணவர்கள் இல்லாத காரணத்தால் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வெளியார்கள் எவரும் வராமல் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விரிவுரையாளர்கள் தொழுகைக்காக குறித்த பள்ளியில்  கலந்து கொள்வதாகவும் தெரிவித்தனர். அத்துடன் இஸ்லாமிய உடை  அணிவதை தடை செய்வது என்பதும் உண்மைக்கும் புறம்பானதாகும். அதாவது அவசர கால சட்டத்தின் மூலமாக புர்கா, நிகாப் தடை செய்யப்பட்டுள்ளது என்பது எல்லோரும் அறிந்த விடயம். அந்த சட்டத்தின்படி பல்கலைக்கழக வளாகத்தினுள்  பெண் மாணவிகள் ஆடை அணிவதற்கான  அதே நடைமுறை பேணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எனவே  பல்கலைக்கழகத்தில் எமது நடவடிக்கைகள் வழமை போலவே இடம்பெறும் என்பதையும் இது தொடர்பில் மாணவர்கள், பெற்றோர்கள் அச்சமடையத் தேவையில்லை பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் மேலும் தெரிவிக்கின்றனது.

-இக்பால் அலி

No comments:

Post a comment