பெருமளவு பிக்குகளின் 'ஆடை' வைத்திருந்த முஸ்லிம்கள் மூவர் கைது - sonakar.com

Post Top Ad

Friday, 3 May 2019

பெருமளவு பிக்குகளின் 'ஆடை' வைத்திருந்த முஸ்லிம்கள் மூவர் கைது


ஐந்து சாக்குப் பைகளில் பௌத்த பிக்குகள் அணியும் சிவுர (காவியுடை) மற்றும் கையிலேந்திச் செல்லும் விசேட பாத்திரங்கள் 105 மற்றும் கூரிய ஆயுதம் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.பலபிட்டியவில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையையடுத்தே அங்கு இவ்வாறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ரியால் நிலாம் (25), ரிஸ்லான் நிலாம் (24), முகமது சமது (41) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதலையடுத்து நாடளாவிய ரீதியில் பெருமளவு சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment