
ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் கோட்டாபே ராஜபக்ச இருப்பதற்கான சாத்தியம் இல்லையென தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா.
ஆனாலும், கடந்த அரசுக்கும் சஹ்ரான் கும்பல் பற்றி தகவல் வழங்கப்பட்டுள்ளபோதிலும் கோட்டாபேயும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பது உண்மையென பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சட்ட-ஒழுங்கு அமைச்சு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டால் தன்னால் அதற்குரிய கடமையை சரிவரச் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதோடு தற்போதைய தீவிரவாத பிரச்சினையைத் தீர்க்க 2 வருடங்கள் செல்லும் என முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment